காலையில் தோசை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தோசையும் இட்லியை போல ஒரு சிறந்த காலை உணவு தான், ஆனால் இதில் நாம் தோசை ஊற்றும்போது கவனமாக இருக்க வேண்டியது எண்ணெய் சேர்க்கும் விஷயத்தில் தான், தோசையில் எண்ணெய் பார்த்து ஊற்ற வேண்டும், கரண்டி கணக்கில் ஊற்றுவதை தவிர்த்தல் வேண்டும்.
- நம்முடைய உடலுக்கு கார்ப்ஸ் மிகவும் அவசியமான ஒன்று தான் ஆனால் இதில் எண்ணெயை மட்டும் பார்த்து அளவோடு சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.
- நாம் தோசையை உண்பதினால் நமக்கு தோசையில் இருந்து வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கூட சிறிதளவு கிடைக்கிறது, தோசைக்கு சாம்பார் உண்பதினால் புரதம், வைட்டமின் மற்றும் மினரல் நிறையவே கிடைக்கின்றன.
- சர்க்கரை நோயாளிகள் அரிசி மாவு தோசையை தவிர்த்துவிட்டு கம்பு தோசை, ராகி தோசை என சாப்பிட்டுவர உடலில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயாளிகள் தோசைக்கு தேங்காய் சட்னியை தவிர்த்தல் வேண்டும்.
- தோசையில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதினால் இதனை காலையில் உணவாக எடுத்துக் கொள்வதினால் இதயத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் தோசையில் எண்ணெய் மட்டு அளவாக பயன்படுத்த வேண்டும்.