திருஷ்டி சுத்தி போடுவது ஏன் தெரியுமா…?
ஒரு குடும்பத்தில் தம்பதியிடையே சச்சரவும், சண்டையுமாக இருந்தால், உறவுகளில் விரிசல் வந்துவிடும். எனவே, கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவேளை இருவரிடமும் ஒற்றுமை குறைந்திருந்தால், அதனை எளிய பரிகாரங்கள் மூலம் சரிசெய்துவிடலாம் . எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க, சண்டை, நிம்மதி இல்லாத சூழ்நிலையில், கணவன் மனைவி ஒற்றுமை திகழ வேண்டுமானால், இதற்கு கல் உப்பு, மிளகு இருந்தால் போதும்.
இதுவும் ஒரு பரிகாரமே. குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும் அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம்.
கல் உப்பு :
ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பூஜை அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும், 27 மிளகுகள், 27 கல் உப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கணவன் மனைவி இடையே சண்டை தீர வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டு, இந்த கண்ணாடி டம்ளருக்குள் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும், மிளகையும் போட வேண்டும்.
இப்போது உங்கள் பிரச்சனையை தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொண்டு போய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்து விட வேண்டும். அல்லது வீட்டிலேயே சிங்கில் கொட்டி விடலாம். இப்படி செய்து வரும்போது, கூடிய சீக்கிரம் தம்பதிக்குள் பிணக்குகள் மறைந்து இணக்கம் அதிகமாகிவிடும்.
இதற்கு கொம்புள்ள விரலி மஞ்சள் 2 இருந்தால் போதும். இந்த விரலி மஞ்சளை செவ்வாய்க்கிழமையன்று வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தம்பதியின் உடைகளிலிருந்து நூல் அல்லது துணியை சிறிதாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு விரலி மஞ்சளில் ஆணின் துணியையும், இன்னொரு விரலி மஞ்சளில் பெண்ணின் துணியையும் சுற்றிக்கொள்ள வேண்டும்.
பாதி சுற்றியதுமே, 2 விரலி மஞ்சள்களையும் ஒன்றாக சேர்த்து, தம்பதியின் துணிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து சுற்ற வேண்டும். பிறகு இதனை பூஜையறையில் வைத்து, அதற்கு முன் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, தம்பதிக்குள் சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு மறுநாள் காலையில் இந்த மஞ்சளை எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள புற்று உள்ள கோவிலுக்கு சென்று, புற்றில் போட்டுவிட வேண்டும். இறுதியாக புற்றை சுற்றி மஞ்சள் தூளையும், குங்குமத்தையும் தூவ வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்களுடைய வேண்டுதலை கூறிவிட்டு, புற்றை சுற்றி கொட்டிய மஞ்சளிலிருந்து ஒரு கைப்பிடி அளவு மட்டும் எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலையில் கணவனும் மனைவியும் இந்த மஞ்சளை, தாங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். இப்படி 9 வாரங்கள் செய்து வந்தால், கணவன் – மனைவிக்குள் எந்த மனஸ்தாபமாக இருந்தாலும் அனைத்தும் நீங்கிவிடும் என்று சொல்லப்படுது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..