இந்து மத நம்பிக்கையின் படி நெற்றியில் போட்டு வைத்து கொள்வது பாரம்பரிய வழக்கங்களின் ஒன்றாக கருதப்படுகிறது.
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன.ஆகவே நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும்.
இதனால் நெற்றி வலி, தலைபாரம், தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். ஆகையால் அந்த பகுதிகளை குளிர்ச்சியுடன் வைப்பதற்காகவே சந்தனம், குங்குமம் போன்ற குளிச்சியூட்டும் பொருட்களை அந்த பகுதியில் இடுகிறோம்.
இதனை நம் முன்னோர்கள் இறை வழிபாட்டுடன் இணைத்து உள்ளனர். ஆகையால் தான் கோவிகளில் பொதுவாகவே திருநீறு, குங்குமம், சந்தானம், போன்றவற்றை நெற்றியில் இடுவதற்காக தருகின்றனர்.
இதனை நம் நெற்றியில் இட்டு கொள்வதன் மூலம் உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும்.