வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் உள்ள ‘பிரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.
முக்கனிகளில் மிகவும் பிரபலமான கனி வாழை. இது அனைத்து சீசன்களிலும் எளிதில் கிடைக்க கூடியது. இதனை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய பழமாகும்.
100 கிராம் வாழைப்பழத்தில் 90 கொலொறியை தருகிறது. அதேபோல் இதில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. மேலும் இதில், வைட்டமின்கள். தாது உப்புக்கள் நிறைய உள்ளன. ‘பிரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.
இதனை, விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான ‘உடனடி எனர்ஜி’ கிடைக்கும்.
மேலும் உடல் இடை குறைவாக உள்ள குழந்தைகள் தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அது சரியாகிவிடும்.
இதில் உள்ள வைட்டமின் பி-6 ரத்த சோகை போன்ற குறைப்பாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். இதய ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
Discussion about this post