பிரபல பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் பாகிஸ்தானின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர். 1999ம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லவும் காரணமாக இருந்தார். இவரின் , யார்க்கர்கள் ரொம்பவே பாப்புலர். தற்போது, வருணணையாளராக அவர் பணியாற்றி வருகிறார். ஐ.பி.எல் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்த நிலையில், பாகிஸதானின் ஹைதரபாத் நகரிலுள்ள நியாஸ் ஸடேடியத்துக்கு வெளியே, வாசிம் அக்ரமின் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அவரின், பந்து வீசும் ஸ்டைலில் அந்த சிலை வடிவமைக்கப்பட்டது. ஆனால், முகத்தை மட்டும் அச்சு அசல் வாசிம் அக்ரம் போல வடிவமைக்க முடியவில்லை. இந்த சிலை திறந்தும் வைக்கப்பட்டு விட்டது. தற்போது, இந்த சிலையின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இது, வாசிம் அக்ரம்தானா? என்று அவருக்குவாது தெரியுமா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் இந்த சிலை 10 சதவிகிதம் சிமெண்டும் 90 சதவிகிதம் வருத்தமும் நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு சிலை திறக்கப்பட்ட போதும், இதே போன்று விமர்சனம் எழுந்தது.சச்சின் சிலை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை நினைவு படுத்துவதாக இருப்பதாக ரசிகர்கள் அப்போது, விமர்சித்திருந்தனர்.