உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேர்கடலை..!
- வேர்கடலைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி உள்ளது.
- கர்பிணி பெண்களுக்கு அவசியமான போலிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது.
- வேர்கடலை பெண்களின் கர்ப்பப்பையை சீராக செயல்பட வைத்து குழந்தைபேறு உருவாக உதவுகிறது.
- கர்பிணி பெண்களுக்கு, கருவின் நரம்பு வளர்ச்சி மற்றும் மூளை சிறப்பாக அமைய உதவிபுரிகிறது.
- வேர்கடலை ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
- மன அழுத்தத்தை குறைக்க வேர்கடலை உதவுகிறது.
- வேர்கடலை இதய நோய்களை தடுக்க உதவுகிறது.
- வேர்கடலை தசைகளை வளர்ச்சி அடைய செய்கிறது.
- வேர்கடலை சருமத்தில் எண்ணெய் பசையை தக்க வைத்து குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது.
- வேர்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் சூரியகதிர்களால் சரும செல்கள் சேதமாவதை தடுக்கிறது.