காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!
தமிழகத்தில் இந்த மாதம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், மழையினால் பேருந்துகள் மற்றும் இரயில்கள் நேரத்திற்கு வராதது சற்று கடுப்பாக உள்ளது.
ஆனால் இந்த நிலையில் கூட நம் மனம் இன்னும் ஒன்றை நினைத்து கொண்டு தான் இருக்கும்.. அது தான் நம் மனதிற்கு சற்று ஆறுதல் என சொல்லலாம்..
இந்த மழையை ரசித்து கொண்டே., தேநீருடன் மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது நம் மனதிற்கும், மூளைக்கும் சற்று நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும் என சொல்லலாம்.. அப்படி இன்று நான் கேட்டு ரசித்த பாடல்கள்..
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த பாடல் தான்… கமல், சிம்பு, அபிராமி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் விரைவில் திரையில் வெளியாக உள்ளப்படம் தான் “தக்லைப்” இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
அதில் பின்னணி பாடகர் சின்மையி பாடிய இந்த பாடலை யாராலும் கேட்காமல் இருக்க முடியாது..
“காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வழி தீரவில்லை…
முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ..”
இந்த பாடல் மட்டும் இல்லைங்க இதுமாதிரி இன்னும் நிறைய பாடல்கள் நம் மனதில் வந்து போகும்.. எப்போது நம் மூளை காலை நேரத்தில் தான் அதிகமாக செயல்படுமாம்.. அவற்றிற்கு அந்த நேரத்தில் அதிக சிந்தனை கொடுப்பது மூளையை மட்டுமின்றி நம் உடலையும் அதிகம் பாதிக்கும் என சொல்லலாம். எனவே காலை நேரங்களில் மென்மையான பாடல்கள் கேட்பது சிறந்தது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்..