“தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்”
இந்தியா முழுவதும் நாளை 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு சார்பில் துறை ரீதியாக மேற்கொண்டாடி வருகின்றனா்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் மற்றும் மெடலை குடியரசு தலைவர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வீரதீர சேவை, மிகச்சிறப்பாக பணி செய்தவர்கள், மெச்சத்தக்க சேவை என்ற 3 வகைகளில் ஆண்டுக்கு 2 முறை ஜனாதிபதி பதக்கம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சுதந்திர தினத்ததையொட்டிஇந்த 3 பிரிவுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 1,037 பேர் ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சோ்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவில் சப்ளைஸ் டி.ஜி.பி.யாக இருந்து வரும் வன்னிய பெருமாள், தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக், ஐ.ஜி. கண்ணன் உள்பட 23 போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்பிக்களான பெரோஸ் கான் அப்துல்லா, சுரேஷ் குமார், கிங்ஸ்லின், சியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் எஸ்பிக்களான ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டிஎஸ்பிக்களான டில்லிபாபு, மனோகரன், சங்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சந்திர மோகன், ஹரிபாபு, தமிழ் செல்வி, சப் – இன்ஸ்பெக்டர் முருளி, ரவிசந்திசரன், முரளிதரன் உள்ளிட்டவர்களுக்கும் மெச்சத்தக்க சேவை பிரிவில் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..