குறைவான கலோரிகள் கொண்ட உணவுப் பொருட்கள்..!
வெள்ளரிக்காயில் 18% வீதத்திற்கு குறைவான கலோரிகள் மட்டும் உள்ளதால் இது உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேழ்வரகு மாவில் தயாரிக்கப்பட்ட கூழில் மிகக் குறைந்த கலோரிகள் மட்டும் உள்ளதால் இதனை காலை உணவாக சாப்பிட மிகவும் உகந்தது.
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் தக்காளியில் மிகக் குறைவான கலோரிகள் மட்டுமே இருக்கிறது.
பீட்டா கரோட்டீன் இரும்புச்சத்து வைட்டமின் சி சத்துகள் உள்ள பீட்ரூட்டை சாப்பிடும்போது உடலில் இருக்கும் கொழுப்புகள் அனைத்தும் கரையும்.
பொட்டாசியம் மற்றும் நார் சத்துகள் நிறைந்த காலிஃபிளவரில் குறைந்த அளவிலான கலோரிகள் மட்டுமே இருக்கிறது.
தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய குறைந்த கலோரிகள் கொண்ட ஒரு உணவுப் பொருள் முட்டை.
பாஸ்பரஸ் கால்சியம் மினரல்ஸ் ஆகிய சத்துக்களை அதிக அளவில் உள்ளடக்கி உள்ள பூசணிக்காயில் குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளதால் இதனை ஜூஸ் செய்தும் பொரியல் செய்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சோளத்தில் வைட்டமின் இ அதிக அளவில் இருப்பதால் இது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. எனவே இதனை உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம்.
