நீரில் ஊறவைத்த உலர் திராட்சையின் வியக்க வைக்கும் பலன்கள்..!
உலர் திராட்சை என்பது வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களை பெற்றிருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இப்போ நீரில் ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவதினால் என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குதுனு பார்க்கலாம்..
1. இரத்த சோகை: இரத்த சோகையை கொண்டிருப்பவர்கள் கருப்பு திராட்சையை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இரவில் நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் நீருடன் உண்டால் உடலில் ரத்த அணுக்களை இது அதிகரிக்கும்.
2. சிறுநீரகப் பாதையில் நோய் தொற்று: இந்த சிறுநீரக பிரச்சனைக்கு ஆயுர்வேத மருத்துவம் சொல்வது என்னவென்றால், இரவில் ஒரு டம்ளர் நீரில் 10 திராட்சை ஊற வைத்து இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான்.
3. கெட்ட கொலஸ்ட்ரால் நீங்கும்: உலர் கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லாததால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் கொலஸ்ட்ரால் அவர்களுக்கு குறையும்.
4. உடலில் வெப்பம் நீங்குதல்: உடலில் அதிகமாக வெப்பம் இருப்பவர்கள், இந்த திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை நாள் முழுக்க குடித்து வர உடல் வெப்பம் தணியும்.
5. மாதவிடாய் பிரச்சனைகள்: பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு , வயிற்று வலி ஆகியவை இருப்பவர்கள் தினமும் கருப்பு திராட்சை ஊற வைத்து உண்டுவர இந்த பிரச்சனை கட்டுக்குள் வரும்.
6. மலச்சிக்கல்: கர்பமாக இருக்கும் பெண்களுக்கு மலச்சிக்கல் அடிக்கடி இருக்கும், அப்போது இந்த திராட்சையை நீரில் கொதிக்க வைத்து பின் இந்த திராட்சையை நன்றாக மசித்து பின் தேன் கலந்து நீருடன் இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.
7. உயர் இரத்த அழுத்தம்: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நீரில் ஊறவைத்த திராட்சையை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் நல்ல மாற்றம் அளிக்கும்.
8. எலும்பு பிரச்சனைகள்: எலும்பு பிரச்சனையால் அவதிப்படுவோர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். காரணம் இதில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. திராட்சையை தினமும் சாப்பிட நல்ல மாற்றம் அளிக்கும்.
