சிறுநீரக கோளாறுகளை நீக்கும் திருச்சி நடராஜர்..!
உலகிலேயே உருவாக்கத்திற்காக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் இருப்பது நமக்கு தெரியும்.
ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை,
தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்,
பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்
ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல
பல கோடியிலான சூரிய சக்திகள் நிறைந்த அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில்
திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
அப்பேற்ப்பட்ட நடராஜர் சிலை ஆசிய கண்டத்திலேயே இந்தியாவின் தமிழ் நாட்டில் தான் இருக்கிறது.
இந்த சிலை மற்ற சிலைகளை போல உளி கொண்டு செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதல்ல, சித்தர்களுடைய நவலிங்க பூஜையினால் சித்தர்களின் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய ஆச்சரியம் நிறைந்த அபூர்வ சிலை ஆகும்.
இந்த சிலை உருவான பாறை பஞ்சநதன பாறை என்று கூறுகிறார்கள்.
இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநதன பாறையாக இருக்கும்.
அகத்தியர் பெருமானாரால் சொல்லப்பட்ட உண்மை என்னவென்றால் பிரதோஷம் உள்ள ஒரு நாளில் இக்கோவிலில் நாம் செய்யும் வழிபாடு ஒரு கோடி அளவிலான புண்ணியத்தை நமக்கு தரும் என்பதாகும்.
தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.
இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
சிறுநீரக கோளாறு உடையவர்கள் இந்த அற்புத நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊற வைத்து பருக வேண்டும்.
இக்கோவிலில் கொடிமரத்தின் மேல் விதானத்தில் 9 கிரஹங்கள் 12 ராசிகள் 15 திதிகள் மற்றும் 27 நட்சத்திரங்களும் செய்யப்பட்டுள்ளது.
எனவே இக்கொடிமரத்தின் கீழே நாம் நின்று வழிபட்டால் நம்முடைய ஜாதகம் திரும்பவும் புதிய ஒரு ஜாதகமாக சிருஷ்டிக்கப்படுகிறது.
இத்தகைய அற்புதம் கொண்ட கோவில் திருச்சி மாவட்டத்தில், திருச்சி டூ சென்னைக்கு வரும் வழியில் உள்ள பாடலூருக்கு அடுத்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊட்டத்தூரில் அமைந்துள்ளது.
