வெற்றிமாறனின் அடுத்த கூட்டணி…இந்த நடிகரா..?
பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இந்த படத்திற்கு பிறகு, ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என்று பல்வேறு வெற்றிப் படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.
தற்போது, விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் இவர், அதன்பிறகு வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குவதில் மட்டுமல்ல:
சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட வெற்றிமாறன், திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி பல நல்ல புதிய இயக்குநர்களுக்கும் ஒரு தயாரிப்பாளராக வாய்ப்பு வழங்கி வருகிறார்.
இதுவரை, காக்கா முட்டை, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
விமலுடன் கூட்டணி:
இவ்வாறு பல்வேறு படங்களை தயாரித்த வெற்றிமாறன், நடிகர் விமலை வைத்து, மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில், படத்தின் பெயர் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்பதற்கு பதில், சார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏன்? எதற்காக? என்று பல்வேறு காரணங்கள், இந்த பெயர் காரணம் குறித்து தற்போது கேட்கப்பட்டு வருகிறது.
-பவானி கார்த்திக்