கருப்பு கவுனி அரிசியை உண்பதால் இத்தனை நன்மைகளா..!
அரிசியால் செய்யப்படும் உணவுகளையே நாம் அன்றாட உணவுகளில் எடுத்துக்கொள்கிறோம். அதிகப்படியாக அரிசி உணவுகளை உண்பதால் பலவித உடல் வியாதிகள் ஏற்படுகின்றன.
அதற்கு பதிலாக கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன மற்றும் இந்த கருப்பு கவுனி அரிசி நமது உடல் உறுப்புகளுக்கு என்ன பயன் தருகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
இதய பராமரிப்பு:
கருப்பு கவுனி அரிசியில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடை:
எடை குறைக்க முயல்பவர்கள் பொதுவாக இந்த கவுனி அரிசிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் உடல் எடை அதிகரிக்காமல் கொழுப்புகளை கரைக்கவும் உதவுகின்றன.
குடல் ஆரோக்கியம்:
இதயம், கல்லீரல், குடல் என இவற்றிற்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கின்றன. மேலும் இவை செரிமானத்தை சீராக வைத்துக்கொள்கின்றன.
சர்க்கரை அளவு:
வெள்ளை அரிசி உண்பதால் முதலில் பலரும் பாதிக்கப்படுவது இந்த சர்க்கரை நோயால் தான். கவுனி அரிசியில் மிகவும் குறைவான அளவு இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
மூளை வளர்ச்சி:
கருப்பு கவுனி அரிசியில் ஆன்தோசயனின்ஸ் அதிக அளவில் இருப்பதால் இது மூளை வளர்ச்சியையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.
கல்லீரல்:
வெள்ளை அரிசியில் இருக்கும் கார்போ சத்துக்கள் கல்லீரலில் கூடும் நச்சுக்களை தடுக்க முன்வரவில்லை. ஆனால் கவுனி அரிசியில் இந்த நச்சுக்களை வெளியேற்றும் சத்துக்கள் உள்ளன. இதனால் கல்லீரல் ஆரோக்கியமாக உள்ளன.
இந்த கருப்பு கவனி அரிசியை நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.