நூடல்ஸை விரும்புவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்குதா..!
இக்காலத்தில் நூடல்ஸ் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒரு உணவு வகைகளில் இருக்கிறது. இதனால் மக்களின் பயன்பாடும் அதிகமாகி உள்ளது. இது போன்ற இன்ஸ்டன்ட் உணவுகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் உள்ளது.
இதில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் சத்துக்கள் எதுவும் இல்லை என்பதால் இது நமக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடியது.
நூடல்ஸ் என்பது பாமாயிலில் பொறித்து எடுக்கக்கூடிய ஆரோக்கியமற்ற உணவாக கூட இருக்கலாம்.
நூடல்ஸை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மேலும் இதனால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பு, கொழுப்புகள் அதிகரித்தல், உடல் எடை கூடுதல் ஆகியவை காணப்படுகிறது.
நூடல்ஸ் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. கெட்ட கொழுப்புகளை உடலில் சேர்க்கிறது, இதனால் உடலுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை.
எனவே இன்ஸ்டன்ட் நூடல்ஸை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்த்துவிட்டு எப்போதாவது ஆசைக்கு ஒரு நாள் மட்டும் உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுவதுமாக இதை தவிர்த்து விட்டாலும் நல்லது தான்.