சத்துக்கள் நிறைந்த பப்பாளி ஆரஞ்சு ஜூஸ்..!
பப்பாளி பழ துண்டுகள் – 1 கப்
ஆரஞ்சு – 1
வாழைப்பழம் – 3 துண்டு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை
தேன்- தேவையான அளவு
மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை
முதலில் ஆரஞ்சு பழத்தை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் சாறை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸியை எடுத்து அதில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, வாழைப்பழம், பப்பாளி துண்டுகள், உப்பு, தேன் மற்றும் ஐஸ்கட்டி ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கண்ணாடி குடுவை எடுத்து அதில் அரைத்த ஜூஸை ஊற்றி சிறிது மிளகுத்தூள் சேர்த்து கலக்கி குடித்தால் ஜில்லுனு இந்த வெயிலுக்கு சுவையாக இருக்கும்.
