உடல் எடையை குறைக்க கடைப்பிடிக்க வேண்டியவை…
உடல் எடையை குறைக்க நினைக்க விரும்புபவர்கள் அசைவ உணவான இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சர்க்கரை உள்ள உணவுகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தினமும் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும், உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
புடலங்காய், கேரட், புரோக்கோலி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, பாகற்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காய், ஆரஞ்சுப் பழம், அன்னாசி, சாத்துக்குடி ஆகியவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
இரவில் சீக்கிரம் உறங்கி அதிகாலையில் எழும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
சரியான இடைவெளியில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
