ADVERTISEMENT
மிளகின் மருத்துவ குணங்கள்..!
- ஒரே ஒரு மிளகு போதும் உண்ணும் உணவு ருசியாக இருக்க,
- இரண்டு மிளகுடன் இரண்டொரு ஆடாதோடா இலை போதும் இருமல் சளி குணமாக,
- மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்க்கும்போது கேசம் கூட முசு முசுவென்று வளரக்கூடும்,
- நான்கு மிளகெடுத்து சுக்கும் சிறிது சேர்த்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போய்விடும்,
- ஐந்து மிளகெடுத்து சுக்கும் திப்பிலியும் இணையும்போது கோழை அப்படியே ஓடிவிடும்,
- ஆறு மிளகெடுத்து சோம்பு இடித்து சேர்த்து உண்டுவர மூலநோய் வந்த சுவடின்றி போய்விடும்,
- ஏழு மிளகெடுத்து இடித்து நெய் விட்டு அன்னத்துடன் பிசைந்து உண்ண பசி எடுப்பதுடன் தொண்டைக்கட்டு விட்டுபோகும்,
- எட்டு மிளகெடுத்து பெருங்காயம் சேர்த்து கொண்டால் வாந்தி கூட எட்ட நிற்கும்,
- ஒன்பது மிளகெடுத்து துளசியும் சேரும்போது ஒவ்வாமையை ஓட விடும்,
- ஆறேழு மிளகை வாயில் போட்டு கடித்து மென்றுவிட்டு பகைவன் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.