தூக்கம் கெட்டால் மரணம்..!
தூக்கமின்மை என்பது ஒருவருக்கு அவர்களின் உடம்பில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும் நிலையை ஏற்ப்படுத்தும். தன் வாழ்நாளில் சரியான தூக்கத்தை கடைபிடிக்காதவர்கள் மரண நிலையை அடைகிறார்கள் என ஆய்வுகள் சொல்கிறது. அவற்றை பற்றி பார்போமா..
இன்றைய காலத்தில் இளைஞர்களின் மரணத்திற்கு சரியான தூக்கமின்மை தான் முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மன அழுத்தம், செல்போன் ஆகியவற்றால் தங்களுடைய தூக்கத்தை இழக்கும் பலரும் அவர்களின் வாழ்நாளை குறைத்துக் கொள்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
தூக்கம் 20-23 என்பதில் தயாரித்த அறிக்கையில் சரியாக தூக்கம் இல்லாத 40% பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தூக்கம் என்பது ஒருவருடைய உயிரை காப்பாற்ற எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்ததாக 7 முதல் 8 மணி நேரமாவது நிம்மதியாக உறங்க வேண்டும்.
தூக்கமின்மை என்பது இரவு நேரங்களில் கடினமான உணவுகளை உட்கொள்ளும்போது அது வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்து நமக்கு நெஞ்செரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகளை உண்டாக்கும் இதனால் தூக்கம் கெடும்.
தூக்கமின்மையானது நீரிழிவு நோய், மன அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, தைராய்டு ஆகிய சுகாதார பிரச்சனைகளால் தூக்கமானது இரவில் பாதிக்கப்படும்.
பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் உண்டாகும் பசி, வலி ஆகியவை இரவில் தூக்கத்தை அகற்றிவிடுகிறது.