சென்னை வந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!! 17 நாள் பயணத்தில் 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!!
கடந்த மாதம் ஆகஸ்ட் 28ம் தேதி தமிழகத்தில் முதலீட்டாளர்கள் ஈர்பதற்காக அமெரிக்க சுற்றுபயணம் மேற்கொண்டார்.. 17 நாட்கள் பயணத்தை முடித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை வந்தடைந்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்று தமிழ்நாட்டிற்கு 7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., “எல்லோருக்கும் வணக்கம், எல்லாம் எப்படி இருக்கீங்க நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்தித்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அதை விட உங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பல நல்ல செய்திகளுடன் நான் தமிழகம் திரும்பி இருக்கிறேன்..
இந்த அமெரிக்க அரசு பயணம் வெற்றிகரமான பயணமாக முடிந்தது.., இது வெறும் சாதரண பயணம் அல்ல, சாதனை பயணம். இந்த சாதனை எனக்கானது அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம்.. இந்த 17 நாட்கள் சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் 7,616 கோடி வரையில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மேலும் 25 முன்னணி நிறுவனங்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி ஆலோசனை நடத்தப்பட்டது இந்த அமெரிக்க பயணத்தில் இதுவரை 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் இன்னும் பல முன்னணி நிறுவனங்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது..
3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போர்டு நிறுவனம் தமிழகத்திற்கு வரவுள்ளது இந்த நிறுவனம் சென்னையில் அமையவுள்ளது இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதி
இந்த முதலீடுகள் தொடர்பான அனைத்தையும் விவரமாக சட்டசபையில் சமர்ப்பித்துள்ளோம் சட்டசபையில் பேசியவற்றை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி படித்து பார்க்க வேண்டும்.
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது வேதனை அளிக்கிறது.. அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது. முதலீடுகள் குறைவு என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறினார்.