தினம் ஒரு கேரட்..ஆரோக்கியமான வாழ்வு..!
சருமத்தில் எந்தவிதமான கரும்புள்ளிகள் தழும்புகள் இல்லாமல் இருக்க தினமும் ஒரு பச்சை கேரட் சாப்பிட்டு வரலாம்.
கேரட்டில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உடலில் எதிர்கால புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.
தினம் ஒரு பச்சை கேரட் சாப்பிடுவதினால் ரத்த நாளங்கள் மற்றும் ரத்த செல்கள் வலிமை அடையும்.
இது இதய நரம்புகளில் கொழுப்புகளை சேர விடாமல் தடுக்கிறது.
தினம் ஒரு கேரட் எடுத்துக் கொள்வதினால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான கால் வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.
கண் பிரச்சனைகளான கண் மங்குதல், கண்புரை, கண்களில் நீர் வடிதல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை சரிசெய்ய கேரட் உதவிகிறது.
கேரட்டானது செரிமானத்தை மேம்படுத்தி நல்ல ஜீரண சக்தியை தருகிறது.
கேரட்டினை நீங்கள் மென்று சாப்பிடுவதினால் உங்கள் உடம்பில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதினால் அது உடலில் கெட்டை கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உருவாக்குகிறது.