பருத்தி பால் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..?
பருத்தி பாலானது இரத்த அழுத்தத்தை பாராமரித்து இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பருத்தி பாலில் அதிக அளவிலான கால்சியம் சத்துகள் இருப்பதால் இது எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் நன்மை அளிக்கக்கூடியது.
பெண்களுக்கு மாதவிடாய் மாதந்தோறும் சரியாக வரவில்லை எனில் இந்த பருத்தி பாலை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்து வரலாம்.
பருத்தி பாலில் சேர்க்கப்படும் சுக்கு, கருப்பட்டி, மிளகு ஆகியவற்றால் சளி, இருமல் பிரச்சனைகள் உடனடியாக சரியாகும்.
பருத்தி பாலை பருகுவதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும் இதனால் முதுகுவலி ஆகியவையும் சரியாகும்.
வெறும் வயிற்றில் பருத்தி பாலை குடிப்பதினால் குடல்புண், வயிற்று புண் ஆகியவை குணமாகும்.
பருத்தி பாலில் இருக்கும் அதிகபடியான நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்கும்.
குழந்தையை பெற்றெடுத்திருக்கும் தாய்மார்கள் பருத்தி பாலை குடிக்க பால் சுரப்புகள் அதிகமாகும்.