மழைக்காலத்துக்கு ஏற்ப முசுமுசுக்கை டீ ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
முசுமுசுக்கை இலை கைப்பிடி
டீத்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
கிராம்பு 2
துளசி 10 இலைகள்
ஏலக்காய் 1
பனை வெல்லம் சிறிது
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சூடாகும் வரை வறுத்து பின் மிளகுத்தூள், துளசி, மஞ்சள்தூள், முசுமுசுக்கை இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் சமையத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு டீத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்து டீத்தூள் நன்றாக இறங்கியதும் ஒரு வடிக்கட்டி கொண்டு நீரை தனியே வடிகட்டவும்.
பின் அதில் தேவையான அளவிற்கு பனைவெல்லம் இடித்து சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சூப்பரான முசுமுசுக்கை இலை டீ தயார்.
இந்த மழைக்காலங்களில் இதுமாதிரி டீ செய்து குடித்து பாருங்க, மழைக்காலத்தில் வரும் இருமல், சளி, மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகள் இந்த டீயை குடிப்பதினால் குணமாகும்.