ஈசியான சமையல் குறிப்புகள்..! கட்டாயம் தேவைப்படும்..!
தயிர் வடை செய்யும்போது அதன் மேல் வறுத்து அரைத்த சீரகப்பொடியை சேர்த்தால் நன்றாக மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
தேங்காய் நீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்க்க ரசம் ருசியாக இருக்கும்.
சப்பாத்தி பிசைந்த மாவு மீந்துபோய்விட்டால் அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி காற்று புகாத டப்பாவில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைத்தால் மாவு கலர் மாறாமல் இருக்கும்.
வெள்ளரியானது குறைந்த அளவு கலோரியும் அதிக அளவில் நீர்ச்சத்தும் கொண்டுள்ளது எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரியை சாப்பிடலாம்.
கடலை வகைகளை ஊறவைக்க மறந்துபோய்விட்டால் வெறும் வாணலில் வறுத்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
தக்காளி சட்னியில் வறுத்து அரைத்த எள் பொடி தூவினால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
பச்சைமிளகாய் பழுத்துபோகாமல் இருக்க ஒரு பாட்டலில் மிளகாயை போட்டு அதில் சிறிது மஞ்சள்தூளை தூவி நன்றாக மூடி வைக்கலாம்.
கறிவேப்பிலை துவையலில் உளுத்தம் பருப்பு சேர்ப்பதற்கு பதில் வேர்கடலையை வறுத்து சேர்த்தால் நல்லா வாசனையாக இருக்கும்.
வடை செய்ய துவரம் பருப்பு, கடலைபருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வடை செய்தால் சூடு போனதும் கூட வடை ருசியாகவே இருக்கும்.
