சமையல் கத்துக்கணுமா..? இதைப் படிங்க..!
சுண்டைக்காய் குழம்பில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்பு கொடுத்தால் குழம்பு கூடுதல் சுவையாக இருக்கும்.
கிரேவி மற்றும் சூப்பில் சேர்க்க கிரீம் இல்லையெனில் அதில் வெண்ணெய் அல்லது சிறிது பால் சேர்க்கலாம்.
ஆப்பிளை நறுக்கி வைக்கும்போது அதில் சிறிது உப்பு தடவி வைக்க ஆப்பிள் கருத்து போகாமல் இருக்கும்.
வடை செய்யும்போது எண்ணெய் உறிஞ்சிக் கொள்ளாமல் இருக்க வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கலாம்.
தேங்காயை நெருப்பில் காட்டி சூடேறியதும் ஆறவைத்து கரண்டியை வைத்து லேசாக எடுத்தாலே தேங்காய் அழகாக வந்துவிடும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது மதிய உணவு கொடுக்கும்போது சாதத்தை குழைத்து கொத்தமல்லி விதையை வறுத்து துவையல் செய்து சாப்பிட கொடுக்கலாம்.
தயிர் உரை ஊற்றும்போது உரை ஊற்ற தயிர் இல்லையெனில் ஒரு காய்ந்த மிளகாயை பாலில் போட்டுவைத்தால் தயிர் கிடைத்துவிடும்.
கோதுமை மாவில் பூச்சு பிடிக்காமல் இருக்க பிரிஞ்சி இலையை அதில் போட்டுவைக்கலாம்.
வெஜிடபிள் கட்லெட் செய்யும்போது சிறிது தேங்காய் சேர்க்க கட்லெட் சுவையாக இருக்கும்.
முட்டைக்கோஸ் பொரியல் செய்யும்போது அதில் சிறிது பால் ஊற்றி சமைக்க சுவை கூடுதலாக இருக்கும்.
உருளைக்கிழங்கு சீவியதும் அதில் சிறிது பயித்தம் மாவு தூவி விட நன்றாக மொறுமொறுவாக இருக்கும்.
மீன் கழுவிய பாத்திரத்தில் அதன் வாடை போக புளி அல்லது சீயக்காய் சேர்த்து கழுவினால் நீங்கிவிடும்.
