இதை செய்தால் போதும் அகால மரணமும் ஓடிவிடும்..!
ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரமாவது நடக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ் நடப்பது உடலின் நலத்திற்கு மிகவும் நல்லது என சொல்கிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 4000 ஸ்டெப்ஸ் நடந்தால் அகால மரணத்தையும் விரட்டலாம் என தற்போதய ஆய்வு கூறுகிறது.
காலை உணவுகளில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வதினால் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கலாம்.
உடல் பருமனை கட்டுப்படுத்த ஜவ்வரிசியில் கிச்சடி, உப்புமா ஆகியவற்றை செய்து சாப்பிடலாம்.
உடற்பயிற்சி ஆரம்பத்தில் உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால் அதுவே ஒரு நாள் உங்களை பெருமைப்பட வைக்கும். அது உங்களை நீங்களே நேசிக்கும்படி செய்யும்.
கர்ப்பிணிகள் உணவில் முட்டை சேர்த்துக் கொண்டால் அது வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு மூளை வளர்ச்சியை சிறப்பாக அமைக்கும்.
இரவில் தூங்க செல்வதற்கு முன் லேசாக சூடாக இருக்கும் பாலை குடிக்கும்போது அது நல்ல தூக்கத்தை வர வைக்கும்.
அரிசியை இரண்டாவது கழுவும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிக்கும்போது சருமத்தில் இருக்கும் நோய்கள் குணமாகும்.
பற்களின் மஞ்சள் கறை நீங்க அரிசி மாவு, சால்ட், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பற்களில் தேய்த்து வரலாம்.
பித்தளை பாத்திரம் பளப்பளக்க புளித்த இட்லி மாவு, மஞ்சள்தூள், சீயக்காத்தூள் ஆகியவற்றை கலந்து பாத்திரங்களில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்து கழுவினாலே போதும்.
குழந்தைகள் அளவுக்கு அதிகமாக பேரிச்சை சாப்பிடும்போது அது அஜீரண கோளாறுகள் மற்றும் மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது.