சூரிய நமஸ்காரம் எதற்கு..?
சூரிய நமஸ்காரம் செய்வதினால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த குழாய்களில் அடைப்புகள் உண்டாவதை தடுக்க உதவியாக இருக்கிறது.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும்போது உடலின் எடை கணிசமாக குறைவதை காணலாம்.
பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சூரிய நமஸ்காரம் ஒரு நல்ல தீர்வாக அமையும்.
உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தை சீராக வைத்திருக்க சூரிய நமஸ்காரம் செய்வது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கவும் தைராய்டு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை சரிச் செய்யவும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதினால் கழுத்து, கை மற்றும் வயிறு பகுதியில் இருக்கும் தசைகள் வலுவடையும்.
என்றென்றும் இளமையாகவும் முகப்பொலிவுடனும் இருக்க சூரிய நமஸ்காரம் தினமும் செய்து வரலாம்.