நலம் தரும் பொடிகள்..!
துளசிப்பொடி:
தினமும் காலை மற்றும் இரவில் 5 கிராம் துளசிப்பொடியை உணவிற்கு பின் வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
துளசிப்பொடி உடலில் நெஞ்சு சளி, இருமல், வயிற்றுக் கோளாறு ஆகியவற்றை சரிச்செய்வதுடன், உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது.
சுக்குப்பொடி:
தினமும் காலை மற்றும் இரவில் அரை ஸ்பூன் சுக்குப்பொடியை உணவிற்கு முன் தேன் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
சுக்குப்பொடி இருமல், கண்ணில் நீர் வடிதல், சளி ஆகியவற்றை சரிச்செய்யும்.
அதிமதுரப்பொடி:
தினமும் காலை மற்றும் இரவில் 5 கிராம் துளசிப்பொடியை உணவிற்கு பின் வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
அதிமதுரப்பொடி குடல் புண்,ஆஸ்துமா, சளி, வாய்ப்புண், தொண்டை புண், இருமல் ஆகியவற்றை சரிச்செய்கிறது.
கறிவேப்பிலை பொடி:
300 மில்லி நீரில் 10 கிராம் அளவு கறிவேப்பிலை பொடி சேர்த்து கொதிக்க வைத்து 100 மில்லி வந்ததும் அந்த நீரை குடிக்கலாம் அல்லது நீரில் காலை மற்றும் இரவில் கலந்து குடித்து வரலாம்.
கறிவேப்பிலை பொடி பித்தம், காய்ச்சல், ருசியின்மை, வயிற்றுக் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும்.
கண்டங்கத்திரி பொடி:
தினமும் காலை மற்றும் இரவில் 5 கிராம் கண்டங்கத்திரி பொடியை உணவிற்கு பின் வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
கண்டங்கத்திரி பொடி ரத்த அழுத்தம் மற்றும் காசநோயை கட்டுக்குள் வைக்கும். இருமல்,இளைப்பு, நெஞ்சு எரிச்சலை சரிசெய்யும்.
சிற்றரத்தைப்பொடி:
தினமும் காலை மற்றும் இரவில் 5 கிராம் சிற்றரத்தைப் பொடியை உணவிற்கு பின் வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
சிற்றரத்தைப்பொடி மூட்டு வலி, மார்பக நோய், வீக்கம், சளி, இருமல் ஆகியவற்றை சரிசெய்யும்.