அத்திக்கடவு அவிநாசி திட்டம் துவக்கம்..!! நிறைவேறிய 60 ஆண்டுகால கனவு நிறைவு..!!
கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் இன்று காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்..
பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீரை பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள 1,045 குளம், குட்டைகளை நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணியை தொடங்கி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.. அதனை ஏற்று, அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது..
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சார்பில் அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டப் பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு 90 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,747 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
இதுகுறித்து திட்ட அதிகாரிகள் கூறுகையில் முதற்கட்டத்தில் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்படும் கன அடி நீரானது 1,000, 1,500, 2,300 கன அடி என உயரத்தப்படுவதாக விவசாயிகளுக்கு அதிகாரிகள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். மேலும், ஆகஸ்ட 15ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஈரோட்டிற்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு, மாவட்டம் மட்டுமின்றி கரூர் மற்றம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிக்கமான பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கேட்டுக்கொண்டார். நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.37 அடியாகவும், நீர் இருப்பு 25.98 டிஎம்சியாகவும், நீர் வரத்து 876 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வாய்க்காலில் 500 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 750 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை போராட்டம் வாபஸ் :
அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்படுவதால், பாஜக நடத்த இருந்த போராட்டத்தை நிறுத்தியுள்ளது.., இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் ஆகியும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற கால தாமதம் ஆனதால் ஆகஸ்ட் 20ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்த இருந்தோம்.,
தற்போது இத்திட்டம் தொடங்கியிருப்பதால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது தமிழக மக்களின் 65 ஆண்டுகால கனவு நிறைவேறுவது மகிழ்ச்சி. என அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..