தேனும் இலவங்கப்பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட உண்டாகும் மாற்றங்கள்..!
ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு தேன் மிகவும் அவசியமானதாக உள்ளது. தேன் சாப்பிடுவதால் இளைமையாக இருக்கலாம், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம், உடலின் எடையை குறைக்க தேன் தேவைப்படுகிறது. மேலும் இதனுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து சாப்பிடும்போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
- அன்றாடம் தேனுடன் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து சாப்பிட அல்சர் பிரச்சனை குணமாகும்.
- சருமத்தில் இருக்கும் சிரங்கு, சொரி பிரச்சனைகளுக்கு தேனுடன் இலவங்கப்பொடி சேர்த்து சாப்பிட சரியாகும்.
- புற்றுநோய் பாதித்தவர்கள் தேன் மற்றும் இலவங்கப்பொடி சேர்த்து சாப்பிட நோயினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
- சிறுநீரக பாதிப்புகள் குணமாக வெந்நீரில் 2 ஸ்பூன் இலவங்கப்பட்டைபொடி, 1 ஸ்பூன் ட்ஹேன் கலந்து குடித்து வரலாம்.
- செரிமான கோளாறுகளையும் வாயு தொல்லையும் நீக்குவதற்கு தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து சாப்பிடலாம்.
- உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலை கிருமிகளுக்கு எதிராக வலுவாக்குகிறது.
- முதியோர்களுக்கு இழந்த சக்தியை மீட்டெடுக்க தேனுடன் இலவங்கபட்டை பொடியை சேர்த்து சாப்பிடலாம்.
- வயிற்றில் இருக்கும் அஜீரணத்தை போக்கி உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை தினமும் இருவேளையில் சாப்பிட்டு வர காதில் இருக்கும் மந்தம் குணமாகும்.
- இது வாய் துர்நாற்றம், பற்களின் பாதுகாப்பை வலுவாக்குகிறது.
- வெந்நீரில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து குடித்து வர உடம்பில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைகிறது.
- தேன், இலவங்கபொடி மற்றும் வெந்நீரில் கலவையானது இருமல், சளி,சைனஸ் ஆகியவற்றை சரிசெய்து தொண்டை கரகரப்பு, தொண்டை புண்ணையும் குணமாக்குகிறது.
- பித்தம், கபம் குணமாக தேன், இலவங்கப்பட்டைபொடி, மஞ்சள்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.