ஆரோக்கிய அமிர்தம்..!
இரவில் தேன் கலந்து சாப்பிடுவதால் இதயத்திற்கு வலிமை கிடைக்கும்.
பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடும்போது உடலுக்கு சக்தி கிடைக்கும்.
மாதுளை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடும்போது உடலில் புது இரத்தம் உருவாக உதவும்.
இருமல் குறைய எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்து வரலாம்.
நன்றாக தூக்கம் வர ஆரஞ்சு பழத்தின் சுளையில் தேன் கலந்து சாப்பிடலாம்.
தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
பித்தம் சரியாக இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
உடலில் கட்டிகள் மற்றும் வீக்கம் இருந்தால் அதன் மேல் சுண்ணாம்புடன் தேன் கலந்து தடவி வர கட்டிகளின் ஆறும் வீக்கம் குறையும்.