முதல்வர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… தீவிர விசாரணையில் அதிகாரிகள்..!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவபதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எமிரேட்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் 17 நாட்கள் தங்க இருப்பதாகவும் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீட்டாளர்களை கொண்டு வருவது இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவலை முதலமைச்சர் செல்லும் எமிரேட்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. உடனே இது குறித்து விமான நிலைய போலீசார் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் பதற்றத்துடன் இருந்த விமான நிலைய அதிகரிகள் இன்று அதிகாலை முதலமைச்சர் சென்ற பயணிகள் விமானம் பாதுகாப்பாக துபாயில் தரையிறங்கியதாக தகவல் தெரிந்ததும் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும், துபாயில் தரை இறங்கிய விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”