குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தினமும் இதை குடுங்க…!
ஆப்பிள் – 1/4 கிலோ
கேரட் – 1/4 கிலோ
பீட்ரூட் – 1/4 கிலோ
நாட்டு சக்கரை – 3/4 கிலோ
பாதாம் – 25 கிராம்
முந்திரி – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
முதலில் ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை சுத்தம் செய்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து முந்திரி, பாதாம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடி செய்துக் கொள்ளவும்.
அதே வாணலில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், நீர் சுண்டியதும் அரைத்த பொடியை தூவி கிளறி இறக்கவும்.
பின் நன்றாக ஆற வைத்து பின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் பவுடர் பதத்திற்கு வந்துவிடும்.
அவ்ளோதான் சத்துக்கள் நிறைந்த ஹெல்த் ட்ரிங்க் தயார். இதை ஒரு டம்ளர் பாலில் 2 ஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு சத்தான ஹெல்த் ட்ரிங்க் பவுடர் ரெடி.