குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின்கள்..! எந்த பருவத்திற்கு எந்த அளவு வைட்டமின் அவசியம்..!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் மிகவும் முக்கியமானவை.
இதில் எந்த வயது குழந்தைக்கு எந்த வைட்டமின் தேவை? எந்த அளவு வைட்டமின் ட்ஹேவை என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் ஏ!
வைட்டமின் ஏ ஆனது ஆறு மாத குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தை பருவத்தில் உண்டாகும் இறப்புகளை தடுக்க இந்த வைட்டமின் பயனுள்ளதாக அமைகிறது.
காய்கறிகள்,முட்டை, பச்சை இலை, மீன் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு உணவுகள் கொடுக்க ஆரம்பித்ததும் மருத்துவரின் அறிவுரைப்படி இந்த உணவுகளை அளிப்பது சிறந்தது.
வைட்டமின் பி!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் பி ஆனது ஒன்று முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
வளர்ந்து வரும் குழந்தைகளின் நரம்பு மண்டலம், தசை மண்டல ஆரோக்கியத்தை காக்க வைட்டமின் பி பயன்படுகிறது.
வெண்ணெய் பழம், வாழைப்பழம், ஆப்பிள் ஆகிய பழங்களில் வைட்டமின் பி அதிகம் நிறைந்துள்ளது. கடல் வாழ் உயிரினங்களான மீன் போன்றவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது.
வைட்டமின் சி!
வைட்டமின் சி ஆனது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி குறைபாடு எலும்புகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
ப்ரோக்கோலி, கொய்யா பழம் ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளதால் இவற்றை குழந்தைகளின் உணவு வழக்கத்தில் பயன்படுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.
வைட்டமின் ஈ!
வைட்டமின் ஈ ஆனது மூன்று வயத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தாக உள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 9 IU அளவில் வைட்டமின் ஈ தேவையாக உள்ளது.
வைட்டமின் டி!
இந்த வைட்டமின் டி ஆனது 12 மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நாளுக்கு 400 IU அளவில் அவசியமானதாக உள்ளது.
குழந்தைகளின் சீரான உடல் வளர்ச்சிக்கு இந்த வைட்டமின் பயனுள்ளதாகிறது.
