உங்க குழந்தை படித்ததை மறக்கிறார்களா..? அப்போ இது உங்களுக்குத்தான்..!
குழந்தைகளுக்கு கல்விதான் மிகப்பெரிய சொத்து ஆகும். சில குழந்தைகள் குறைந்த நேரம் மட்டுமே தெளிவாக புரிந்து படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் ஆனால் ஒருசில குழந்தைகள் மணிக்கணக்காக படிப்பார்கள் ஆனால் தேர்வில் சரியான மதிப்பெண் பெற மாட்டார்கள் இதற்கு காரணம் படித்தவற்றை அப்படியே மறந்து விடுவதுதான்.
இது அவர்களுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி குழந்தைகள் மறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என 4 வழிகளை இப்போ பார்க்கலாம்.
புரிந்து படித்தல்:
குழந்தைகள் பாடங்களை மணிக்கணக்கில் படிப்பது என்பது முக்கியமில்லை அவர்கள் எந்த முறையில் படிக்கிறார்கள் என்பது தான் மிகவும் முக்கியம். பாடங்களை மனப்பாடம் செய்து படிக்கும் குழந்தைகள் எளிதில் அவற்ரை மறந்துவிடுகிறார்கள். அதனால் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் எளிமையாக புரிந்து படிக்கும்போது அவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தல்:
மாணவர்கள் தாங்கள் படித்திருக்கும் பாடங்களை மற்ற நண்பர்களுக்கு சொல்லி கொடுக்கும்போது அது அவர்களுக்கு மறக்கவே மறக்காது. எனவே படிக்கும் பாடங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
திரும்ப படித்தல்:
நீங்கள் மற்றவர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுக்கும்போது மறந்துவிட்டால் அதை திரும்பவும் படிக்க வேண்டும். மேலும் கூகுள், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியும் தெளிவாக புரிந்து படிக்கும்போது அது எளிதில் மறக்காது. சில வகை பிள்ளைகளுக்கு படிப்பதை விட கேட்க்கும்போது எளிதில் அது புரியும்.
மதிப்பாய்வு செய்தல்:
குழந்தைகள் படிக்கும்போது என்ன கற்றுக் கொண்டார்கள், மற்றவர்களுக்கு என்ன சொல்லி தருகிறார்கள் என்பதை வைத்து அவர்களை மதிப்பாய்வு செய்தல் வேண்டும். இதனால் அவர்கள் படித்தது மறக்காது. நல்ல மதிப்பெண்களும் பெறலாம்.
மேலே சொன்ன அனைத்தையும் மாணவர்கள் கடைப்பிடிக்கும்போது அது அவர்கள் படிக்கும் பாடங்கள் மறக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.
