ஆரோக்கியமான சர்லாக் இனி வீட்டிலேயே செய்யலாம்..!
குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கொடுப்பது , தாய்மார்களின் கடமையாகும் அதற்காக நாம் அதிக அளவில் செலவு செய்து கடையில் உள்ள பொருட்களை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். நம் வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்தே சரளக் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் அவற்றைப் பார்க்கலாம்
வீட்டிலேயே சரளாக் செய்வது எப்படி
1. ஒரு கப் வீட்டு சாப்பாடு அரிசி
2. கடலைப்பருப்பு
3. பாசிப்பருப்பு
4. துவரம் பருப்பு
5. கொள்ளு
6. பாதாம் பருப்பு
7. முந்திரி
8. உளுத்தம்பருப்பு
செய்முறை:
இவற்றை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நீரை வடித்து விட்டு வெள்ளை துணியில் 5 மணி நேரம் காய வைக்கவும்.
முழுமையாக காய்ந்தவுடன் வெறும் கடாயில் வறுத்து பின்பு, ஆற வைத்து
மிக்ஸியில் போட்டு பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததும் நன்கு ஆற வைத்து பாட்டிலில்
சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு தேவைப்படும் போது ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒன்றரை ஸ்பூன் ,தண்ணீர் சேர்த்து,பத்து நிமிடம் நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் சுவைக்காக சிறிது சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
குறிப்பு:
ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
– நிரோஷா மணிகண்டன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..