சோம்பு தண்ணீர் குடிப்பதின் நன்மைகள்..!
சோம்பில் துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
சோம்பை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கும்போது வாயில் இருக்கும் துர்நாற்றம் அகலும்.
சோம்பில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் இதனை வெறும் வயிற்றில் குடிப்பதினால் உடல் எடையை குறைக்கலாம்.
சுவாச கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றிற்கு சோம்பு தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
செரிமான தொந்தரவுகளால் உண்டாகும் வாயு கோளாறுகளுக்கு சோம்பு தண்ணீரை குடித்து வரலாம்.
சோம்பு தண்ணீர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
சோம்பு நீர் குடிப்பதினால் கண் சம்மந்தப்பட்ட கோளாறுகளை குணப்படுத்தலாம்.
சருமத்தில் தேமல், அலர்ஜி, அரிப்பு ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய சோம்பு தண்ணீர் ஒரு நல்ல தீர்வாக அமையும்.