விந்தணுக்கள் விந்தையான தகவல்கள்…!
உடல் ஆரோக்கியமாக உள்ள ஆணால் 15 கோடி விந்தணுக்களை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும்.
அந்த ஆரோக்கியமான ஆண் வாழ்நாளில் விந்துப்பையில் சுமார் 12,00,000 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.
ஆணின் விந்தணுக்களிலும் ஆண் பெண் என உள்ளன. ஆண் விந்தணுக்கள் வேகமாகவும்,பெண் விந்தணுக்கள் வலிமையாகவும் காணப்படும்.
விந்தணுக்கள் வெளியானதும் அவற்றில் ஐந்தில் ஒன்று மட்டுமே நீந்தி பயணிக்கும் ஆற்றல் கொண்டிருக்கும்.
பெண்ணின் உடலுக்கும் செல்லும் விந்தணுக்களால் சராசரியாக 5 நாள் வரை உள்ளே உயிர் வாழ முடியும், ஆனால் இதில் சராசரியாக 2 மட்டுமே உயிர் வாழும்.
ஆணின் உடல் வெப்பத்தை விட ஆணின் விந்துப்பையின் வெப்பம் சுமார் 7 டிகிரிக்கு குறைவாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான விந்தணுக்கள் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்யாத ஆணை விட, உடற்பயிற்சி செய்யக்கூடிய ஒரு ஆணுக்கு 73% விந்தணுக்கள் அதிகமாக இருக்கும்.
விந்து நீரில் சுமார் 10% மட்டுமே விந்தணுக்கள் இருக்கும் மீத நீரில் வைட்டமின் சி,கால்சியம் நொதிகள்,புரதச்சத்து,சோடியம் துத்தம்,சிட்ரிக் அமிலம்,பிரக்டோஸ் என்ற இனிப்பு ஆகியவை இருக்கும்.