கத்தரிக்காய் வறுவல்..! சுவை அதிகம்..!
வேர்க்கடலை அரை கப்
தனியா 2 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்
ப்யாத்கே மிளகாய் 8
பூண்டு 3 பற்கள்
உப்பு தேவையானது
கத்தரிக்காய் அரை கிலோ
எண்ணெய் தேவையானது
கடுகு அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
வெங்காயம் 2 நறுக்கியது
கறிவேப்பிலை
உப்பு
முதலில் கத்தரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் வேர்க்கடலை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் தனியா,சீரகம்,மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் ஆறவிட்டு ஒரு மிக்ஸியில் மாற்றி பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் அதில் பெருங்காயத்தூள்,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அத்துடன் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை தூவி கலந்து மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு வதக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் வறுவல் தயார்.