ஆஸ்துமா தொற்று நோய் அல்ல ..!
ஆஸ்துமா நோய் குறித்து பல தவறான தகவல்கள் பரவலாக பரவி வருகிறது. அதுகுறித்து அடுத்ததாக பார்க்கலாம்.
ஆஸ்துமா குழந்தை பருவ நோய்:
ஆஸ்துமா நோயானது குழந்தை பருவ நோயாக நம்பப்படுகிறது. குழந்தை பருவத்தில் இது வருவதாகவும் வளர வளர் இந்நோய் சரியாகிவிடும் என்பதும் நம்பப்படுகிறது, ஆனால் அது அப்படியல்ல ஆஸ்துமா நோயானது எல்லா வயதிலும் யாருக்கு வேணுமானாலும் வரலாம். ஆஸ்துமா நோயானது வாழ்நாள் நோயாகும் என்றாலும் சரியான சிகிச்சையை மேற்கொள்வதின் மூலம் அதனை கட்டுப்படுத்தி நிலையான ஒரு வாழ்க்கையை வாழலாம்.
ஆஸ்துமா நோயாளி உடற்பயிற்சி செய்ய கூடாது:
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால் அது ஆபத்தாகும் என பலராலும் நம்பப்படுகிறது, ஆனால் அது அப்படியில்லை ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதினால் நுரையீரலுக்கு இது நல்லது.
ஆஸ்துமா ஒரு தொற்று நோய்:
ஆஸ்துமா நோய் ஒரு தொற்று நோய் என நம்பப்படுகிறது. இதனால் ஆஸ்துமா நோயாளிகளுடன் பழகும்போது அது நமக்கும் தொற்றிக் கொள்ளும் என பயப்படுகிறார்கள். உண்மையில் ஆஸ்துமா நோய் தொற்று நோய் அல்ல ஒரு அழற்சி நோயாகும். நுரையீரலில் காற்றுபாதைகள் சுருங்கியும் வீங்கியும் இருக்கும். சளியும் அதிகமாக சுரக்கும்.
