உடல் எடையை குறைக்க உதவும் காளான்..!
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதுடன் சரியான உணவு முறையும் பின்பற்றுவது முக்கியம். அதற்கு காளான் சிறந்த உணவு பொருளாக அமையும்.
உடல் எடையை குறைக்கும் காளான்:
காளானை உணவில் சேர்த்து கொள்ளும்போது உடல் எடையை சிறப்பாக குறைக்கலாம். காளானில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் வைத்திருக்கும். இதனால் அதிகமாக உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. காளானில் இருக்கும் கொழுப்பு மற்றும் குறைந்த அளவு கலோரியானது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
காளானை விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். காலையில் சாலட் அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம். மதிய நேரங்களில் காளான் பிரை ரைஸ், காய்கறிகளை சேர்த்து காளான் செய்து சாப்பிடலாம். மாலை நேரங்களில் காளான் சூப் செய்து சாப்பிடலாம். இரவு நேரங்களில் குறைந்த அளவிலான காளானை சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.
காளானின் நன்மைகள்:
காளானை உடல் இழப்புக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறது. காலளானில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் இருக்கும் பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் அபாயத்தை காளான் குறைக்கிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
காளானில் பல்வேறு விதம் இருக்கிறது. அனைத்து வகை காளானும் சாப்பிட உகந்ததல்ல, கடைகளில் விற்கும் காளானை மட்டும் வாங்கி சமைத்து சாப்பிட வேண்டும். அதுவே உடலுக்கு நன்மைகளை அளிக்கும்.
