சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!!
திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் பாலன் இல்லத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அவருக்கு வாழ்த்து கூறி திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கி கவுரவித்தார்.
அதன்பின்னர் மேடையில் பேசிய அவர், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபட்டவர் நல்லக்கண்ணு என்று புகழாரம் சூட்டினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம் – தொண்டு – பொதுநலன், இதுவே தோழர் #நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்!
எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… pic.twitter.com/Rs3vdaPizu
— M.K.Stalin (@mkstalin) December 26, 2024
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் போராட்டம் – தொண்டு – பொதுநலன், இதுவே தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம் என்றும், எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களும் நூற்றாண்டு காண்கிறார், இந்த இயக்கமே அவரின் உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம். தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது. தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..