பாய்களும் அதன் பயன்களும்..!
பிரம்புப்பாய்:
பிரம்புப்பாயில் படுப்பவர்களுக்கு சீதபேதி சீதத்தாள் வரக்கூடிய சுரம் ஆகியவற்றை நீக்க உதவியாக இருக்கிறது.
கோரைப்பாய்:
கோரைப்பாயில் படுப்பவர்களுக்கு உடல் சூட்டை போக்குகிறது. சுரம் குறைக்க உதவுகிறது. இரவில் நன்றாக உறக்கம் வர உதவுகிறது. உடலுக்கு குளிர் அளிக்க உதவுகிறது.
ஈச்சம்பாய்:
ஈச்சம்பாய் வாதநோயை குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை அதிகரிக்க உதவுகிறது.
மூங்கில் பாய்:
மூங்கில் பாயில் படுத்தால் உடல் சூடு அதிகரித்து பித்தத்தை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.
தாழம் பாய்:
தாழம் பாயில் படுத்தால் தலைசுற்றல், வாந்தி, பித்தம் ஆகியவை நீங்குகிறது.
இளவம் பஞ்சு படுக்கை:
இளவம் பஞ்சு தலை முதல் பாதம் வரை இதமாக இருக்கும். உடலில் தாது பலம் பெருக உதவியாக இருக்கிறது.
மலர் படுக்கை:
மலர் படுக்கையானது ஆண்மையை அதிகரித்து, பசி உணர்வை அதிகமாக்கவும் உதவுகிறது.
கம்பளிபடுக்கை:
கம்பளி படுக்கையானது குளிருக்கு இதமாக இருக்கும். இது குளிர் சுரம் நீங்கவும் உதவியாக இருக்கிறது.
ரத்தினக் கம்பளம்:
ரத்தினக் கம்பளம் படுக்கையானது உடலில் நஞ்சு பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்க உதவுகிறது.