ஒரு கப் ரவை இருந்தா போதும் ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி..!
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையானது
தண்ணீர் – சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கசூரி மெத்தியை அரை ஸ்பூன் எடுத்து அதனை கைகளால் நன்றாக கசக்கி அதனை ரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் பயன்படுத்தி கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கி இந்த கலவையில் ஊற்றி ஸ்பூனால் நன்றாக கலக்கவும்.
பின் இதில் சிறிது நீர் சேர்த்து தளர்வாக பிசைந்து அதனை முப்பது நிமிடங்களுக்கு மூடி ஊறவைக்க வேண்டும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு மாவை நன்றாக கைகளால் பிசைந்து விட வேண்டும்.
பின் மாவை உங்களுக்கு தேவையான வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய மாவை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் ஈசியா ரவா ஸ்நாக்ஸ் தயார்.