குளிர்காலங்களில் இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க..!
குளிர்காலங்களில் உடலில் ஆற்றல் அளவு குறைந்து சோர்வான நிலையில் இருக்கும். அதற்கு இந்தவகையான உணவுகளை சாப்பிடும்போது உடல் சுறுசுறுப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தும் காணப்படும்.
கீரைகள்:
கீரைகள் மற்றும் கோஸ் போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலில் சோர்வு தன்மையை நீக்கி, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
சிட்ரஸ் பழங்கள்:
எலுமிச்சை, ஆரஞ்சு ஆகிய சிட்ரஸ் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக செயல்பட உதவியாக இருக்கிறது. இதிலிருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை குளிர்காலங்களில் உண்டாகும் நோய் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
ஒமேகா 3:
சால்மன், மத்தி போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மனதை சுறுசுறுப்பாக்கி கவலை மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது. இதனை அடிக்கடி சாப்பிடும்போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
காய்கறிகள்:
கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற வேர்காய்களில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து உடலுக்கு நல்ல ஆற்றலை தந்து, சர்க்கரையில் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
பயிறு வகைகள்:
பாதாம், வால்நட், பூசணி விதைகள் ஆகியவற்றில் இருக்கும் மெக்னீசியமானது உடலில் மன அழுத்தத்தை குறைத்து குளிர்கால மந்தமான உணர்வை போக்குகிறது.
புளித்த உணவுகள்:
மோர், தயிர் போன்ற புளித்த உணவுகள் குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை அதிகரித்து வயிறை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இது உடல் எடையை குறைத்து உடலை சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது.
மேலே சொன்ன பொருட்களை கட்டாயம் சாப்பிடும்போது குளிர்கால பிரச்சனைகளை தடுக்கலாம்.