பால் திரிந்துவிட்டால் கீழே கொட்டாதீங்க..!
வாழை இலையை பின்னாடி பக்கமாக சிறிது தீயில் காட்டினால் எவ்வளவு மடக்கி மடித்தாலும் கிழியாது.
பால் திரிந்து போய்விட்டால் அதன் கீழே கொட்டாமல் சிறிது சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கிளறினால் பால்கோவா தயார்.
கொண்டக்கடலை, பட்டாணி ஆகியவற்றை ஊறவைக்க மறந்துவிட்டால் வெறும் வாணலில் எண்ணெய் இல்லாமல் வறுத்து வேகவைக்க சீக்கிரம் வெந்துவிடும்.
தயிர் சாதத்திற்கு கடுகு சேர்த்து தாளிப்பதை விட ஓமத்தை சேர்த்து தாளித்தால் மணமாகவும் இருக்கும். ஜீரணமும் மேம்படும்.
சட்னி செய்யும்போது அப்படியே பச்சையாக சேர்க்காமல் சிறிது எண்ணெயில் வதக்கி செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
சேப்பங்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுவென ருசியாக இருக்கும்.
காய்கறிகளை வதக்கும்போது எண்ணெய் அதிகமாகிவிட்டால் சிறிது கொள்ளு பொடி சேர்க்கலாம்.
இறைச்சி வறுவல் செய்யும்போது கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து செய்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
தேங்காய் சாதம் செய்யுபோது சிறிது வெள்ளை எள் பொடித்து சேர்த்தால் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.
நெய் காய்ச்சும்போது அதில் சிறிது முருங்கை இலை சேர்த்து காய்ச்சினால் நன்றாக மணமாக இருக்கும்.
மதிய உணவிற்கு செய்த பொரியல் மீந்துபோய்விட்டால் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறினால் சாப்பிட ருசியாக இருக்கும்.
அரிசி ஊறவைக்கும்போது அதில் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்தால் சாதம் வெள்ளையாகவும் உதிரி உதிரியாகவும் இருக்கும்.