முதுகு நலம் காக்க..!
அன்றாடம் 21 முறை குனிந்து காலை தொட்டு நிமிர வேண்டும்.
உட்காரும்போது வளையக்கூடாது, நிற்கும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும்.
சுருண்டு படுத்தல் என்பதை செய்யக்கூடாது.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும்.
எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்ந்து இருக்க கூடாது.
டூவீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டுதல் கூடாது.
காலை இருபது முறை மாலை இருபது முறை என தினமும் கைகளை வான்நோக்கி நீட்டுதல் வேண்டும்.
கணினி மற்றும் லேப்டாப் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் திரையில் முதல் வரிக்கு நேராக உங்கள் கண்கள் இருக்குமாறு அமருதல் வேண்டும்.
நாற்காலியில் அமரும்போது உங்களுடைய முதுகுப்பகுதி நாற்காலியை தொட்டவாறு அமர வேண்டும். நாற்காலிக்கும் முதுகுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது.
அதிக பலுவான பொருட்களை தூக்குதல் கூடாது.
சிறுநீரக தொற்றுகள் மற்றும் சிறுநீரக கற்கள் முதுகு வலியை ஏற்ப்படுத்தும்.
நம்முடைய உணவை பாரம்பரிய முறையில் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்.