பெண் மருத்துவர் பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் பெண் வக்கீல்!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சஞ்சாய் ராய் என்பவரை கைது செய்தனர். இவருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு, எந்தவொரு வழக்கறிஞரும் தயாராக இல்லாத நிலையில், அரசே புதிய வழக்கறிஞர் ஒருவரை அவருக்காக நியமதித்துள்ளது. அவர் தான் கபிதா சர்க்கார்.
இந்த பெண் வழக்கறிஞர் யார் என்பதை, தற்போது பார்க்கலாம். அதாவது, ஆரம்ப காலங்களில் சிவில் வழக்குகளை மட்டும் கவனித்து வந்த இவர், தற்போது குற்றவியல் வழக்குகளில் வாதாடி வருகிறார்.
மரண தண்டனைகளின் மீது நம்பிக்கை இல்லாத இவர், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக, ஆயுள் தண்டனையை தான் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஒரு வழக்கின் விசாரணை முடியும் வரை, அவரை நிரபராதியாக தான் கருத வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணைகள் மூலம், நீதியை பெற்றுத் தர முடியும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.
-பவானி கார்த்திக்