ஊதா கலர் முட்டைகோஸின் நன்மைகள்..!
ஊதா கலர் முட்டைகோஸ் உடல் எடையை ஆரோக்கியமான விதத்தில் குறைக்க உதவுகிறது.
இந்த வகை முட்டைகோஸில் கலோரிகள் குறைந்தும் நார்ச்சத்து அதிக அளவிலும் காணப்படுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து சருமத்தை பளப்பளப்பாக வைக்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
இவ்வகை முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் சி,கே மற்றும் கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதயம் தொடர்பான கோளாறுகளை தடுக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான தொந்தரவுகளை சரிச்செய்கிறது.
இந்தவகை முட்டைகோஸை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதினால் குடலில் உண்டாகும் புண்களை தடுக்கிறது.
இதனை ஜூஸ் அடித்து குடிப்பதினால் வயிற்று புண்களை ஆற்றுகிறது.
உடம்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.