வெண்பூசணியை அதிகமாக சாப்பிட உண்டாகும் தீமைகள்..
வெள்ளைபூசணியை உடலுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சளி, இருமல், ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வெள்ளைபூசணியை அதிகமாக சாப்பிடும்போது சிலருக்கு வயிறு மந்தம் மற்றும் செரிமான தொந்தரவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
வெள்ளை பூசணியை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி போன்ற ஒவ்வாமை பிரச்சனை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு.
வெள்ளை பூசணியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதினால் சிலருக்கு வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவை ஏற்ப்படவும் வாய்ப்பு உள்ளது.
வயிற்றில் கருவை சுமந்திருக்கும் பெண்கள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையை பெற்றே வெள்ளை பூசணியை சாப்பிட வேண்டும்.
கற்றாழையை பயன்படுத்துவதின் நன்மைகள்..
சருமத்தில் உண்டாகும் எரிச்சல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வர குணமாகும்.
உடம்பில் ஏதேனும் காயம் ஏற்ப்பட்டால் காயம் ஏற்ப்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவ அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து சீக்கிரம் காயத்தை குணமாக்கும்.
வாரத்தில் ஒரு நாள் கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் எடுத்து நீரில் நன்றாக கழுவி பின் சாப்பிட்டு வர உடலில் இருக்கும் மலச்சிக்கல் சரியாகும்.
கோடைக்காலங்களில் உடம்பில் உண்டாகும் வியர்குரு பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி குளித்து வரலாம்.
அதிகமாக உடல் சூடு உடையவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கற்றாழை ஜெல்லை மோருடன் கலந்து குடிக்கலாம்.
கற்றாழையின் சாற்றினை எடுத்து சர்க்கரை நோயாளிகள் குடித்து வருவதினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.