அரை நெல்லியின் பயன்கள்..!
அரை நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றை வடிக்கட்டி அதனை தலையில் தேய்த்து குளித்து வர தலையில் பொடுகு, தலைமுடி உதிர்வு தீரும்.
அரை நெல்லிக்காய் சாற்றை தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நீண்டு அடர்த்தியாக வளரும்.
குழந்தைகளுக்கு இந்த அரை நெல்லிகாயை சாப்பிட வைக்க வயிற்றுப்புண் மற்றும் ஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அரை நெல்லிக்காயை கொடுத்து வரலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய அரை நெல்லிக்காய் சாப்பிடலாம்.
பெண்களின் உடலில் அதிகமான உடல் சூடு காரணமாக உண்டாகும் வெள்ளைப்படுதலை அரை நெல்லிக்காய் மூலம் தீர்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் அரை நெல்லிக்காயை சாப்பிட்டு வர இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
அரை நெல்லிக்காயில் அதிகமான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு அரை நெல்லி ஒரு நல்ல பலன் அளிக்கும்.
உடலில் அதிகபடியான பித்தம் காரணமாக உண்டாகும் வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றலுக்கு அரை நெல்லி ஒரு நல்ல தீர்வு.